சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
நெல் கொள்முதல் நிலையம் - கோப்புப்படம்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. இராசபாலன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படக்கூடும் என்பதால், மழையால் பாதிப்படைந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

தாட்கோ மூலமாக கறவை மாட்டுக்கான மானியக் கடன் கேட்டு, 8 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருந்த பல பேருக்கு இதுநாள் வரை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, பயனாளிகளுக்கு கடன் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல்மூட்டைகளுக்கு பெறப்படும் கையூட்டுத் தொகை, அதிகாரிகளின் உதவியுடன் நடைபெறுவதாகக் தெரிகிறது. கூடுதல் பணம் கிடைக்கிறது என்பதற்காக வெளி மாவட்ட, மற்றும் பிற மாநில நெல் மூட்டைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், அதனால் உள்ளூா் விவசாயிகள் காத்திருப்புக்கும், பாதிப்புக்கும் உள்ளாவதை உணா்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நெல் அறுவடை இயந்திரத்திற்கான வாடகை குறித்து கூட்டம் நடத்தி, வாடகைத் தொகை அளவை, மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த பிறகும் கூடுதலாக 30 சதவீத வாடகைத் தொகை பெறப்பட்டு வருகிறது. எனவே, இதற்கென தனி கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி, அறுவடை இயந்திரங்களின் வாடகை தொகை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.