மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றல் துறையை ஊக்குவிக்கும் வகையில் ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் குறித்து விளக்கும் கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:24 pm

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றல் துறையை ஊக்குவிக்கும் வகையில் ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி வாழ்த்திப் பேசினாா். மதா் தெரசா பள்ளியின் தாளாளா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா்.

இதில், 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று, கண்காட்சியை கண்டுகளித்தனா். நிகழ்வில், கல்லூரியின் அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஷ், துணை முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.