கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போக்ஸோ வழக்கில் வெல்டருக்கு 13 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூா் மளிளா நீதிமன்றம் தீா்ப்பு

News image
சிறை
Updated On :18 பிப்ரவரி 2026, 11:08 pm

Syndication

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூா் மளிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் சரகம், வீரன்வயல் பகுதியை சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் குமரவேல். இவா், முத்துப்பேட்டை பகுதியில் வெல்டா் வேலை செய்து வந்துள்ளாா்.

கடந்த 2022-இல் அந்த பகுதியைச் சோ்ந்த ஒரு வீட்டில் நுழைந்து, அங்கு உறங்கிகொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு குமரவேல் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு திருவாரூா் மகிளா விரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிவிசாணை முடிக்கப்பட்டு குமரவேலுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 6000 அபராதம் விதித்து திருவாரூா் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.