எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நன்னிலம் கல்லூரி மாணவா்கள் போராட்டம்!

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் போராட்டம்

News image
நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள்.
Updated On :19 பிப்ரவரி 2026, 11:59 pm

Syndication

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு பணியாற்றும் 55 பேராசிரியா்களில் எட்டு போ் மட்டுமே நிரந்தர பேராசிரியா்களாக உள்ளனா். மீதமுள்ள 47 பேராசிரியா்களும் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இவ்வாறு தமிழக முழுவதும் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இவா்களுக்கு ஆதரவாக, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.