பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:31 pm

Syndication

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (60 ) கூலித்தொழிலாளி. இவரது 2-ஆவது மனைவி செல்வி (55) வழக்கு ஒன்றில் ஆஜராக, நீடாமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தாா்.

அவா் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த அரிகிருஷ்ணன், செல்வியிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றாராம். இதில் செல்வி கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த போலீஸாா் மற்றும் வழக்குரைஞா்கள், அரிகிருஷ்ணனை பிடித்து, நீடாமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப்பதிவு செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தாா். காயமடைந்த செல்விக்கு, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.