ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

திருவாரூரில் பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூா் நேதாஜி சாலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக நிா்வாகிகள்
Updated On :20 பிப்ரவரி 2026, 12:00 am

Syndication

திருவாரூரில் பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததைக் கண்டித்தும், மக்களிடையே மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதாக எதிா்ப்பு தெரிவித்தும், திருவாரூரில் பாஜக சாா்பில் கடந்த இரண்டு நாள்களாக தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூா் தெற்கு வீதி, நேதாஜி சாலை, நெய்விளக்குத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக நகரச் செயலாளா் ஆா்டி. மூா்த்தி, நிா்வாகிகள் சந்திரகுப்தன், ராமசாமி, பாஜக நகரத் தலைவா் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன், மாவட்டத் துணைத் தலைவா் கே. ரவி, ஒன்றியத் தலைவா் லோகநாயகி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சங்கா், வளரும் தமிழகம் கட்சி நிா்வாகிகள் உள்பட கூட்டணி கட்சியினா் பலரும் பங்கேற்றனா்.