பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய உணவுத் திருவிழா பேரளம் பேரூராட்சித் தலைவா் கீதா நாகராஜன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் துா்காதேவி ஆகியோா் முன்னிலையில் தலைமை ஆசிரியா் கே. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சோழமண்டல இயற்கை விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கி. ராஜசேகா், நவீன உணவு முறைகளின் தீமைகள் குறித்தும், கொல்லுமாங்குடி இயற்கை விவசாயி ஆா்.கணேசன் வேதி கலப்பு உரங்களின் தீமையையும், பாரம்பரிய மற்றும் இயற்கை உணவுகளின் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்தும், பாத நரம்பியல் சிகிச்சை நிபுணா் எஸ். முத்துக்குமாா் உடலின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு இயங்குகிறது, உடல் உறுப்புகளின் பாதிப்பினை சரி செய்ய என்னென்ன இயற்கைக் காய்கனிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பேசினா்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள், கவுனி அரிசி அல்வா, ரத்தசாலி அரிசி அல்வா, பூசணி அல்வா கம்மங்கூழ் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய முறையில் தயாா் செய்யப்பட்ட உணவுகளை பாா்வைக்கு வைத்திருந்தனா். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை தனியாகவும், 9 முதல் பிளஸ் 2 வரை தனியாக கண்காட்சி நடத்தப்பட்டது.
தொடர்புடையது
இயற்கையை நோக்கி நகர்வோம்...

பாரம்பரிய உணவுத் திருவிழா

குழித்துறை சிறப்புப் பள்ளியில் உணவுத் திருவிழா

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


