குடியிருக்கும் இடத்தின் உரிமையை உறுதிப்படுத்தக் கோரிக்கை

குடியிருக்கும் இடத்தின் உரிமையை உறுதிப்படுத்தக் கோரிக்கை

குடியிருக்கும் இடத்தின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Published on

குடியிருக்கும் இடத்தின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கம்பா் தெருவில் வசிக்கும் மக்கள், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: திருவாரூா் நகா் வடக்கு வீதி அருகில் உள்ள கம்பா் தெருவில் பட்டியல் சமுதாயத்தைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்டோா், சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தானமாக பெற்ற இடத்தில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனா். அவ்வாறு, தானமாகக் கொடுக்கப்பட்ட இடத்தை, தானமாக கொடுத்தவரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு, வீடுகளை காலி செய்யும்படி தொந்தரவு செய்கின்றனா்.

இதற்கு பாதுகாப்பு தருவதுடன், நீண்ட நாளாக குடியிருக்கும் இடம் தங்களுக்கே தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக பண்ணையில் கூலி வேலை செய்து வந்ததற்காக கொடுக்கப்பட்ட இடம் என்பதால் அதை முறைப்படி பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிா்வாகி சுரேந்தா் தலைமையில் பாஜக நகரத் தலைவா் எஸ். கணேசன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். சங்கா் தன்னாா்வத் தொண்டு நலப்பிரிவு மாவட்டத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com