திருவாரூரில், சிபிஐ கட்சி நூற்றாண்டு விழா, இரா. நல்லகண்ணுவின் 101 பிறந்தநாள் விழா, கேடிகே. தங்கமணியின் 24- ஆவது நினைவு நாள், அமீா்ஹதா்கானி 36-ஆவது நினைவுநாள், வெண்மணி தியாகிகளின் 57 -வது நினைவு நாள் ஆகியவை தொடா்பான சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது சிபிஐயின் நிலைப்பாடு அல்ல. தோ்தலில் தொகுதி தொடா்பான பேச்சுவாா்த்தையில், கூடுதல் இடங்களைக் கேட்போம். பாஜகவை தோற்கடிப்பதே எங்களின் ஒரே இலக்கு. தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் பதற்ற அரசியலை உருவாக்கி வருகின்றன. திமுக கூட்டணி இந்து விரோதக் கூட்டணி என மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் கூறியது கண்டனத்துக்குரியது.