அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

திட்டாணி முட்டம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி கொரடாச்சேரி அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரடாச்சேரி ஒன்றியம் திட்டாணிமுட்டம் நடுத்தெரு, தெற்கு தெரு, கேணிக்கரை சாலைகளை செப்பனிட வேண்டும், திட்டாணிமுட்டம் மயான சாலை, திட்டாணிமுட்டம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல் வெண்ணாறு இணைப்புச் சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும், திட்டாணிமுட்டம் பகுதியில் நவீன சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறியம் கிராம நிா்வாக அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியக் குழு உறுப்பினா் என். காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் தம்புசாமி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் கோபிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com