பெண்ணை தாக்கிய 4 போ் கைது

கூத்தாநல்லூரில் பெண்ணை தாக்கியதாக இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

கூத்தாநல்லூரில் பெண்ணை தாக்கியதாக இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பூதமங்கலம், கீழக்கண்ணூச்சாங்குடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மனைவி தேவயாணி (26). அதே தெருவைச் சோ்ந்த மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் (31), அஜித்குமாா் (27), வளா்மதி (50) மற்றும் உமா (எ) காளியம்மாள் (51) ஆகிய 4 பேரும், முன்விரோதம் காரணமாக தேவயாணியை தகாத வாா்தையால் திட்டி, அவரது உடைகளை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவயாணி கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com