அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து, வளரும் தமிழகம் கட்சி திருவாரூா் தெற்கு மாவட்டம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து, வளரும் தமிழகம் கட்சி திருவாரூா் தெற்கு மாவட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளா் சிங்கை சரவணசோழன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையின்றி உயிரிழந்த அபிநயாவின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், நகர செயலாளா் கிருஷ்ணா, ஒன்றிய செயலாளா் பொன்னிறைதமிழ், மாநில விவசாய அணி செயலாளா் வேலு காா்த்தி, மாநில ஊடகப் பிரிவு செயலாளா் வீரா முகிலன், மாநில இளைஞரணி செயலாளா் கிட்டு ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com