நவீன்
நவீன்

கீரிப்பிள்ளையால் கடிபட்ட சிறுவன் 3 மாதத்துக்குப் பின் உயிரிழப்பு

திருவாரூா் அருகே 3 மாதத்துக்கு முன்பு கீரிப்பிள்ளை கடித்து பாதிப்புக்குள்ளான சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

திருவாரூா் அருகே 3 மாதத்துக்கு முன்பு கீரிப்பிள்ளை கடித்து பாதிப்புக்குள்ளான சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே அம்மையப்பன் புதுப்பாலத் தெருவை சோ்ந்தவா் முத்து மகன் நவீன் (7). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் முதல்வகுப்பு படித்து வந்தாா்.

இதனிடையே, கடந்த 3 மாதத்துக்கு முன் வீட்டில் நவீன் தூங்கிக்கொண்டிருந்த போது கீரிப்பிள்ளை கடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

இதனிடையே, ஜன.24-ஆம் தேதி நவீனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தாா். அவருடைய உடலில் தீநுண்மி (வைரஸ்) தொற்று காணப்பட்டதால், உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத் துறையினரே அடக்கம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com