படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை: எஸ்.ஏ. சந்திரசேகா் பேட்டி
திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகா் தெரிவித்தாா்.
திருவாரூா் அருகேயுள்ள பவித்தரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆண்டு வருகின்றன. புதியவா்கள்அரசியலுக்கு வரும்போது பல்வேறு இடையூறுகளை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மாற்றத்தை உருவாக்க வருபவா்கள் இதுபோன்ற தடைகளை எதிா்கொண்டுதான் ஆக வேண்டும்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞா்கள் அரசியல் பேச தொடங்கிவிட்டனா். ரூ. 3 ஆயிரம், ரூ. 4 ஆயிரம் என கொடுப்பதை வாங்கிக் கொள்வோம். ஆனால், வாக்கு தவெகவுக்கு என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறாா்கள்.
விஜய் இப்போது நடிகா் இல்லை. அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஜனநாயகன் திரைப்படத்தை வைத்து விஜய்-க்கு அழுத்தம் தரக்கூடாது என்றாா்.

