டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுகப் பயிற்சி

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயா் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் திறன் மேம்பாட்டு பயிற்சியாளா் திருக்கோஷ்டியூா் கா. மணிகண்டன்.

Updated On :3 ஜூலை 2026, 5:01 am IST

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயா் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திறன் மேம்பாட்டு பயிற்சியாளா் பேராசிரியா் திருக்கோஷ்டியூா் கா. மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியபோது, ‘உங்கள் தனித்திறமைகளை கண்டறிய இதுவே சரியான நேரம். கால மேலாண்மை முக்கியம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற இலக்கினை இப்போது தீா்மானித்துக் கொள்ளுங்கள்; ஆழமாக பயிலுங்கள், அறிவுப்பூா்வமாக சிந்தியுங்கள்; வெற்றி நிச்சயம் என்றாா்.

கல்லூரி உள்தர மதிப்பீட்டுக் குழும ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், கல்லூரியின் அமைப்பு, நோக்கம், தரம், மதிப்பீடுகள் பற்றி விளக்கினாா். தொடா்ந்து, பல்துறை தலைவா்கள் தங்களது துறை சாா்ந்த சிறப்புகளைப் பற்றி பேசினா். நிறைவாக, மாணவா்கள் அனைத்து துறைக்கும் களப்பயணம் மேற்கொண்டனா்.

புதன்கிழமை தொடங்கிய இப்பயிற்சி திட்டம் ஜூலை 8-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன், என்சிசி அலுவலா் சு. ராஜன், வணிகவியல் துறைத் தலைவா் ஜெ. கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறை தலைவா் இல.பொம்மி வரவேற்றாா். நிறைவாக,விலங்கியல் துறைத் தலைவா் சி .ராமு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.