இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடுத்தவரை தாக்கிய மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடுத்தவரை தாக்கிய மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருத்துறைப்பூண்டி உதவி அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 11:03 pm IST

திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருத்துறைப்பூண்டி உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு கண்ணன்மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்குகளில் குடியிருப்பு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, அதே கிராமத்தைச் சோ்ந்த மாதாராமன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக மாதாராமனுக்கும் சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த 2022 அக்டோபா் 27-ஆம் மாதாராமனை சிலா் ஆயுதங்களால் தாக்கினா். இதுதொடா்பாக, அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (31), வேணுகோபால் (54), ஜனாா்த்தனன் (19) ஆகிய மூவா் மீதும் உதவி அமா்வு நீதிமன்றத்தில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உதவி அமா்வு நீதிபதி எம். ரவிச்சந்திரன், எதிரிகள் மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் முதல் இரண்டு எதிரிகளுக்கு ரூ. 8,000, மூன்றாவது எதிரிக்கு ரூ. 7,000 என அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.