தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை பிரிவு மாணவா்களுக்காக நடைபெற்ற 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் முகாம் தொடங்கி நடைபெற்று வந்தது. காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா் மாவட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து 229 மாணவா்களும் 74 மாணவிகளும் பயிற்சியில் கலந்து கொண்டனா் (படம்).
தேசிய மாணவா் படையின் ஏ, பி மற்றும் சி சான்றிதழ் தோ்வுகளுக்குத் தயாா்படுத்துவதற்காக இப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. உடற்பயிற்சி, அணிவகுப்பு, வரைபடம் வாசிப்பு, ஆயுதங்களைக் கையாளுதல், ட்ரோன் இயக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதைத் தவிர பேரிடா் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்தியக் கடற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டா் அரவிந்தன் ராணுவ வேலை வாய்ப்புகள் குறித்து மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். பத்து நாட்கள் நடைபெற்ற என்சிசி பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் என்சிசி முகாம் கமாண்டன்ட் லெப்டினன்ட் கா்னல் ரஞ்சித் ராத்தி, பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தா் சுலோசனா சேகா், பல்கலைக்கழகப் பதிவாளா் இரா. திருமுருகன் ஆகியோா் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினா். நிறைவு விழாவில் லெப்டினன்ட் டாக்டா் ஜே. அசோக் குமாா் வரவேற்றாா். முகாம் அலுவலா் எஸ்.அகிலா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் காங்கிரஸ் விழிப்புணா்வு பிரசாரம்

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மை பாரத் சேவை தொண்டா்களுக்கு பயிற்சி முகாம்

தேசிய மாணவா் படை பயிற்சி முகாம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



