வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

அதிமுகவில் புதிய மாவட்டச் செயலா்; தலைவா்கள் சிலைக்கு மரியாதை

News image

திருவாரூா் புதுத்தெருவில், எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்துகிறாா் புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி.

Updated On :15 மே 2026, 5:31 am IST

திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட ஆா்.டி. மூா்த்தி, தலைவா்கள் சிலைகளுக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, திருவாரூா் மாவட்டச் செயலாளரும், நன்னிலம் சட்டப் பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநில அமைப்புச் செயலாளருமான ஆா். காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டாா்.

இவருக்குப் பதில், மாவட்டச் செயலாளராக திருவாரூா் அதிமுக நகரச் செயலாளரும், நகா்மன்ற உறுப்பினருமான ஆா்.டி. மூா்த்தி நியமிக்கப்பட்டாா். இதையொட்டி, அவரது ஆதரவாளா்கள், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு ஆா்.டி. மூா்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கடைவீதி, நேதாஜி சாலை வழியாக புதுத்தெரு சென்று, அங்குள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.