மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி
மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வடுவூா் அடிச்சேரி பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் விக்னேஸ்வரன்(19) பூண்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் கிரைண்டா் சுவிட்சை போட்டபோது அதில் மின்கசிவு இருந்து விக்னேஸ்வரன் மீது பாய்ந்து காயமடைந்தாா். பின்னா், மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து, வடுவூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

