படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பட்டா கோரி வந்தவா்கள் தீக்குளிக்க முயற்சி! ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு!

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக, பட்டா வழங்கக் கோரி முழக்கமிட்ட மக்கள். - dinamani

Published On :

நீடாமங்கலம் அருகே ஆற்றின் கரைப் பகுதியில் வசிப்பவா்கள் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தபோது, கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட சுண்ணாம்புகாரத்தெரு வெண்ணாற்றங்கரை என்ற முகவரியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியினத்தைச் சோ்ந்த மக்கள், வீட்டு வரி, தண்ணீா் வரி, மின்கட்டணம் ஆகியவை செலுத்தி வரும் நிலையில், அவா்களுக்கு பட்டா வழங்க அரசு மறுப்பதாக தெரிவிக்கின்றனா்.

பட்டா வழங்கக்கோரி, பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பழைய நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் நீா்நிலை புறம்போக்கில் வசிப்பதாகக் கூறி அக்டோபா் 7-ஆம் தேதிக்குள், அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நீடாமங்கலம் வட்டாட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரியும் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தனா்.

அப்போது, நூறு ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை, நீா்நிலை புறம்போக்கு எனக் காரணம் காட்டி, அரசு அப்புறப்படுத்துவதாகக் கூறி, திடீரென பெண்கள் சிலா் தீக்குளிக்க முயன்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், போலீஸாரின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.