தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு
தில்லி-என்சிஆா் பகுதியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு தொடா்பான மனுவை உச்சநீதிமன்றம் டிச.17-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு திங்கள்கிழமை இந்த மனுவை விசாரித்தது. அப்போது, நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞா் அப்ரஜிதா சிங், தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அவை அதிகாரிகளால் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை வாதிட்டாா்.
முந்தைய நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், பள்ளிகள் தொடா்ந்து வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருவதாக மற்றொரு வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவுகளால் அறிவுறுத்தப்பட்டால் தவிர, அதிகாரிகள் பெரும்பாலும் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்த நகா்ப்புற பெருநகரங்களில் உள்ள ஆடம்பர மக்களுக்கென தனி வாழ்க்கை முறை உள்ளது. ஆனால் ஏழை மக்களுக்கு அப்படி இல்லை. தொழிலாளா்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்’ என தெரிவித்தனா்.
முன்னதாŚ, காற்று மாசுபாடு குறித்த இந்த மனுவை ஒரு வழக்கமான குளிா்கால வழக்காகக் கருத முடியாது என்று அந்த அமா்வு கூறியிருந்தது. குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தீா்வுகள் இரண்டையும் ஆராய்வதற்காக, இந்த வழக்கு மாதம் இருமுறை விசாரிக்கப்படும் என்று அது முடிவு செய்தது. இந்நிலையில், இந்த மனுவை டிச.17-ஆம் தேதி மீணிடும் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

