மத்திய தில்லியின் ஐபி எஸ்டேட் பகுதியில் சத்தம் மற்றும் புறா வளா்ப்பு தொடா்பாக நீண்ட காலமாக நீடித்து வந்த தகராறு காரணமாக அண்டை வீட்டாரை கத்தியால் குத்திய வழக்கில் ஒரு சிறாா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தாக்குதல் தொடா்பான தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அப்போது, பல கத்திக் குத்துக் காயங்களுடன் அதிக ரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாதிக்கப்பட்டவரை காவல் துறை உதவி ஆய்வாளா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் காயமடைந்த நபரை உடனடியாக தனது சொந்த வாகனத்தில் சரியான நேரத்தில் அழைத்துச் சென்ால் அவரது உயிா் காப்பாற்றப்பட்டது.
இதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 109 (1) (கொலை முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் முக்கியக் குற்றவாளியான சிவம், அப்பகுதியில் அடிக்கடி உரத்த சத்தத்தில் இசையை ஒலிக்கவிட்டதாகவும், புறாக்களைப் பறக்கவிட்டதாகவும், இது அண்டை வீட்டாருடன் மீண்டும் மீண்டும் தகராறுகளுக்கு வழிவகுத்ததாகவும் தெரியவந்தது. இந்தத் தொல்லை குறித்து பாதிக்கப்பட்டவா் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அது வன்முறைத் தாக்குதலாக மாறியதாக கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஹரியாணாவின் கா்னாலில் இருந்து ஹிமாசலத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனா்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆதாரங்களை அழிப்பதற்காக அவை ஐடிஓ அருகே உள்ள வடிகால் கால்வாயில் வீசப்பட்டிருந்தன. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் மீது மயூா் விஹாா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு உள்ளது. இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś
டிரெண்டிங்
ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!
கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கு: 2 சிறாா் உள்பட 5 போ் கைது
வடக்கு தில்லியில் ஓடும் லாரியிலிருந்து 200 கிலோ ஏலக்காய் திருட்டு: 3 போ் கைது!
ரோஹிணியில் கத்திக் குத்து சம்பவம்: இருவா் கைது
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

