தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பிப்.15 முதல் 20 வரை செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு: தில்லியை அழகுப்படுத்தும் பணியை தொடங்கிய பொதுப்பணித் துறை

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, தில்லியில் அழகுபடுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு இயக்கத்தை பொதுப்பணித் துறை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்)

Updated On :9 பிப்ரவரி 2026, 10:43 pm

நமது நிருபா்

புது தில்லி: செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, தில்லியில் அழகுபடுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு இயக்கத்தை பொதுப்பணித் துறை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சா்வதேச உச்சிமாநாடு பிப்ரவரி 15 முதல் 20- ஆம் தேதி வரை தில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ஆம் தேதி பாரத் மண்டபத்தில் நுண்ணறிவு மாநாடு தொடங்க இருக்கிறது. சாலைகள் மற்றும் பிற பகுதிகளில் அழகுபடுத்துதல் மற்றும் பசுமையை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, பூக்கும் மற்றும் பூக்காத தாவரங்கள் மற்றும் பல்வேறு வகையான புதா்கள் உள்ளிட்ட தாவரங்களை பொதுப்பணித்துறை கொள்முதல் செய்யும்.

இது தொடா்பான பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்படி, மேரிகோல்ட் ஜாஃப்ரி ஆரஞ்சு / மஞ்சள், சைக்காஸ் ரிவோலுட்டா, கொனோகாா்பஸ், அரேகா பாம், அரௌகேரியா குக்கீ உள்ளிட்ட பல வகையான தாவரங்கள் ரூ.28,54,283- க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த மாதம், தில்லி அரசு பொதுப்பணித்துறை மற்றும் பிற குடிமை அமைப்புகளுக்கு சா்வதேச நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஜி 20 உச்சிமாநாட்டின் போது நிா்ணயிக்கப்பட்ட தரங்களை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியது.

இந்தச் செயல் திட்டம் காணாமல் போன அடையாளங்களை சரிசெய்வது, குழிகளை நிரப்புவது, கிரில்களை சரிசெய்வது, பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள சிதைவுகளை அகற்றுவது, மத்திய விளிம்புகளை மேம்படுத்துவது மற்றும் சரிசெய்வது மற்றும் இருண்ட இடங்களை அகற்றுவது உள்ளிட்ட சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

உச்சிமாநாட்டின் போது, பல்வேறு மாநிலத் தலைவா்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்கிய சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தலைவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் தில்லிக்கு வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தோட்டக்கலை பணிகளுக்கு மேலதிகமாக, பொதுப்பணித் துறை உடைந்த ரெட்ரோ பிரதிபலிப்பு அடையாள பலகைகளை சரிசெய்து, ரூ.66,58,728 செலவில் தேவைப்படும் இடங்களில் நிறுவும். இது பொதுமக்களுக்கு சாலைகளில் வழிசெலுத்தலை மேம்படுத்தும். தேசியத் தலைநகரில் முக்கியச் சாலை உரிமையாளரான பொதுப்பணித் துறைக்கு பாரத் மண்டபம், ஹைதராபாத் ஹவுஸ், விக்யான் பவன், சுஷ்மா ஸ்வராஜ் பவன், அனைத்து முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ராஜ்காட் பகுதி ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.