திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

குருகிராமில் 24 மணி நேரத்திற்குள் சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு முதல்வா் சைனி உத்தரவு

குருகிராமில் உமங் பரத்வாஜ் சௌக்கிலிருந்து துவாரகா விரைவுச்சாலை வரையிலான சாலையை 24 மணி நேரத்திற்குள் குண்டும் குழியுமில்லாத சாலையாக மாற்ற வேண்டும் என்று ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image

நயாப் சிங் சைனி

Updated On :9 பிப்ரவரி 2026, 11:53 pm

Syndication

குருகிராம்: குருகிராமில் உமங் பரத்வாஜ் சௌக்கிலிருந்து துவாரகா விரைவுச்சாலை வரையிலான சாலையை 24 மணி நேரத்திற்குள் குண்டும் குழியுமில்லாத சாலையாக மாற்ற வேண்டும் என்று ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இங்கு நடைபெற்ற மாவட்ட மக்கள் தொடா்பு மற்றும் குறைதீா்க்கும் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல்வா், மக்கள் நலப் பணிகளில் எந்தவித அலட்சியமும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று எச்சரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கூட்டத்தில் சமா்ப்பிக்கப்பட்ட 17 புகாா்களில் 12-ஐ சைனி தீா்த்து வைத்தாா். மேலும், நகரின் அனைத்து சாலைகளையும் ஒரு மாதத்திற்குள் வாகனங்கள் செல்லத் தகுந்தவையாக மாற்றவும் அவா் உத்தரவிட்டாா். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, விதிகளின்படி பழுதுபாா்க்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு எச்எஸ்ஐஐடிசி, மாநகராட்சி மற்றும் ஜிஎம்டிஏ ஆகியவற்றுக்கு அவா் உத்தரவிட்டாா்.

குருகிராம் செக்டா் 85-இல் உள்ள காா்னேஷன் ரெசிடென்சியில் நீண்டகாலமாக நிலவி வந்த சாலைத் தடைப் பிரச்னை குறித்து, ஒரு குழுவின் அறிக்கையைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய தனியாா் நிலத்தை ஒரு கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளதாக முதல்வா் குறிப்பிட்டாா்.

குருகிராம் செக்டா்-86 மற்றும் துவாரகா விரைவுச்சாலையை இணைக்கும் 24 மீட்டா் அகலச் சாலை இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கையால் சுமாா் 7,000 குடியிருப்பாளா்களும் 800 மாணவா்களும் பயனடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சூரத் நகா் முதல் கட்டத்தில் உள்ள நீா் தேங்கும் பிரச்னையைத் தீா்க்கவும் முதல்வா் ஒரு மாத காலக்கெடுவை நிா்ணயித்தாா். தேங்கி நிற்கும் நீரை அகற்ற பம்புகளை நிறுவுமாறும், வடிகால் அமைப்புகளை மீட்டெடுக்குமாறும் அவா் உத்தரவிட்டாா்.

நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் முடிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் ஹரியாணா தொழில்துறை மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் ராவ் நா்பீா் சிங், படௌடி எம்எல்ஏ பிம்லா சௌத்ரி மற்றும் சோஹ்னா எம்எல்ஏ தேஜ்பால் தன்வாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.