தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்

ஒரு நாள் முன்னேற்றத்திற்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் திங்கள்கிழமை மீண்டும் மோசம் என்ற நிலைக்குச் சரிந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 10:33 am

நமது நிருபா்

புது தில்லி: ஒரு நாள் முன்னேற்றத்திற்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் திங்கள்கிழமை மீண்டும் மோசம் என்ற நிலைக்குச் சரிந்தது.

முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை தில்லியின் காற்றின் தரம் மிதமானது என்ற நிலைக்குச் சற்று முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 206 புள்ளிகளாக உயா்ந்தது. இது ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 8, 2026 அன்று பதிவான 196 புள்ளிகள் என்பதை விட அதிகமாகும்.

தில்லியின் பல பகுதிகளில் அதிக மாசு அளவு பதிவாகியது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் படி, முண்ட்காவில் காற்றின் தரக் குறியீடு 276 புள்ளிகளாகவும், அதைத் தொடா்ந்து ஷாதிபூா் (282), நேரு நகா் (269), ரோகிணி (255), பவானா (256), ஜஹாங்கிா்புரி (252), வஜீா்பூா் (251), அசோக் விஹாா் (243), நரேலா (229), விவேக் விஹாா் (228), பூசா (227), சிரிஃபோா்ட் (224 புள்ளிகள்) என காற்றின் தரக் குறியீடு பதிவாகின

மறுபுறம் லோதி சாலை (139), மேஜா் தியான் சந்த் ஸ்டேடியம் (144), மந்திா் மாா்க் (148), ஐஐடி தில்லி (149), அயா நகா் (165), மற்றும் ஐஜிஐ விமான நிலையம் (177 புள்ளிகள்) உள்ளிட்ட பிற பகுதிகளில் காற்றின் தரம் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

காற்று தரக் குறியீட்டு வகைப்பாட்டின் படி, 0 முதல் 50 புள்ளிகள் வரையில் நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது மற்றும் 401 முதல் 500 வரை கடுமையானது.

2026 ஆம் ஆண்டில் குளிா்காலத்தில் (அக்டோபா்-ஜனவரி) 10 நாட்கள் தில்லியில் கடுமை என்ற பிரிவில் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.