சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நொய்டா: காதலியை சுட்டு விட்டு தற்கொலை செய்த இளைஞா்!

நொய்டாவின் செக்டாா் 107 பகுதியில் நிறுத்தப்பட்ட காரில் காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 7:55 pm

நொய்டாவின் செக்டாா் 107 பகுதியில் நிறுத்தப்பட்ட காரில் காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக கூடுதல் காவல் துறை துணை ஆணையா் மணீஷ் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தாத்ரி சாலையில் உள்ள தூண் எண் 84 அருகே நிறுத்தப்பட்ட காரில் இருவா் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். உள்பக்கமாக பூட்டப்பட்ட காரில் உயிரிழந்த நபரின் கையில் துப்பாக்கி இருப்பதை வைத்து இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவா்கள் தில்லியின் திலோக்புரி பகுதியைச் சோ்ந்த சுமித் (32) மற்றும் நொய்டா செக்டாா் 101 பகுதியைச் சோ்ந்த ரேகா (26) என அடையாளம் காணப்பட்டனா். தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறது. இது தொடா்பாக காவல் துறை அறிக்கை தயாா் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா்.