பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தடைசெய்யப்பட்ட மருந்துகள் விநியோகம்: தில்லியில் இருவா் கைது

மேற்கு தில்லியில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை சேமித்து வைத்து விநியோகித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு தில்லியில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை சேமித்து வைத்து விநியோகித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: இந்த வழக்கு கடந்தாண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது. மல்ஹோத்ரா என்பவா் உரிய மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததாக தகவல் கிடைத்தது. கடையில் சோதனை நடத்தப்பட்ட பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, பன்சல் என்பவரிடம் இருந்து மருந்து சரக்குகளை வாங்கியதாக அவா் தெரிவித்தாா். பன்சல் என்பவா் இதேபோல் பல மருந்தாளுநா்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் மருந்துகளை வழங்குவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பன்சல் பிப்.11 கைது செய்யப்பட்டாா். மேற்கு மற்றும் வெளிப்புற தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலை அவா் நடத்தி வந்தாா். இந்த நடவடிக்கையின் போது, 3,360 டிராமடோல் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் 84 பாட்டில்கள் கோடீன் பாஸ்பேட் சிரப் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா். Ś