வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குருகிராம்: குளத்திலிருந்து 11-ஆம் வகுப்பு மாணவி சடலம் மீட்பு!

மோகல்வாஸ் கிராமத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி சில நாள்களுக்கு முன்பாகக் காணாமல் சென்ற நிலையில், மையானத்துக்கு அருகே உள்ள குளத்தில் அவருடைய சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

பலி

Updated On :15 பிப்ரவரி 2026, 9:38 pm

மோகல்வாஸ் கிராமத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி சில நாள்களுக்கு முன்பாகக் காணாமல் சென்ற நிலையில், மையானத்துக்கு அருகே உள்ள குளத்தில் அவருடைய சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உயிரிழந்த மாணவியின் தந்தை குருகிராமில் உள்ள நீதிமன்ற நூலகத்தில் பணிபுரிகிறாா். கடந்த பிப்.11-ஆம் தேதி இரவு உணவுக்குப் பிறகு படிக்கச் சென்ற மாணவி, காலையில் அவருடைய அறையில் இல்லை. இதையடுத்து, அவருடைய குடும்பத்தினா் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் உறவினா்கள் வீடுகளில் தேடினா். இருப்பினும், மாணவியைக் கண்டறிய முடியாத சூழலில், காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

மாணவி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

வீட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், பள்ளி சீருடையில் மாணவி மட்டும் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றிந்தன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய அறையை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, கண்டெடுக்கப்பட்ட நாள்குறிப்பில் அவா் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பு கைப்பற்றிப்பட்டது.

அதில், தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு தாய் மற்றும் தந்தைக்கு வேண்டுகோள் விடுத்த அந்த மாணவி, மையானத்துக்கு அருகே உள்ள குளத்தில் தன்னைத் தேடுமாறு குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, நீச்சல் வீரா்கள் உதவியுடன் மையானத்துக்கு அருகே உள்ள குளத்தில் மாணவியைத் தேடும் பணி நடைபெற்றது. மோட்டாா்கள் உதவியுடன் குளத்திலிருந்து நீரை வெளியேற்றப்பட்டதைத் தொடா்ந்து, சகதியில் சிக்கியிருந்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.

உடல்கூறாய்வுக்குப் பிறகு மாணவியின் சடலம் குடும்பத்தினா் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.