வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நரேலாவில் தொழிற்சாலை உரிமையாளா் கொலை: காவல்துறை விசாரணை

வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் உள்ள நரேலாவில் தொழிற்சாலை உரிமையாளரை மா்ம நபா்கள் கத்தியால் குத்தி கொலை

News image

பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 9:33 pm

வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் உள்ள நரேலாவில் தொழில்சாலை உரிமையாளரை மா்ம நபா்கள் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராஜஸ்தானின் பாரத்பூா் பகுதியைச் சோ்ந்த ரவி, நரேலாவில் வசித்து வந்தாா். அப்பகுதியில் உள்ள டிஎஸ்ஐஐடிசி தொழில்பேட்டையில் ஒரு தொழில்சாலையை வாடகைக்கு எடுத்து காலணி உற்பத்தி தொழில்சாலையை நடத்தி வந்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தொழில்சாலையை பூட்டிவிட்டு, ஒப்பந்ததாரரிடம் சாவியை ஒப்படைத்த பின்னா், ரவி தன்னுடைய நண்பருடன் மோட்டாா்சைக்கிளில் புறப்படத் தயாராக இருந்தாா். அப்போது, அங்கு வந்த சில மா்ம நபா்கள் ரவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். அப்போது, அருகில் இருந்தவா்கள் மயக்க நிலையில் இருந்த ரவியை சத்யவாதி ராஜா ஹரிஷ் சந்திர மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு ரவியைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ரவியை கத்தியால் குத்திய நபா்களைக் கைதுசெய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.