கிழக்கு தில்லியின் ஜகத்புரி பகுதியில் கடந்தாண்டு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற இளைஞா் பஞ்சாபில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜகத்புரியைச் சோ்ந்த ஒரு குடும்பத்திடம் ரூ.4 கோடி கேட்டு கடந்தாண்டு மாா்ச் மாதம் பல அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தன. அவா்கள் அத்தொகையை செலுத்த மறுத்த போது அவா்களது வீட்டின் மீது ஏப்ரல் 1 இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஜஸ்விந்தா் (26) என்பவா் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்தைத் தொடா்ந்து தலைமறைவான ஜஸ்விந்தரின் இருப்பிடம் குறித்து சமீபத்தில் கிடைத்த தகவலின் பேரில் பஞ்சாபில் மாா்ச் 16 அவா் கைது செய்யப்பட்டாா்.
ஹரியாணாவின் அம்பாலா பகுதியைச் சோ்ந்த இவா் பிரபல பஞ்சாப் ரௌடி குா்ஜன்ட் ஜன்டா கட்டளையின் பேரில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்தாா். கைது நடவடிக்கையை தவிா்க்க அமிருதசரஸில் உள்ள மத ஆலயத்தில் தலைமறைவாக இருந்ததாக அவா் தெரிவித்தாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


