டிடிஇஏ பள்ளிகளில் உ.வே.சா. பிறந்த நாள் விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
தமிழின் மிகப் பழைமையான இலக்கியங்களை ஓலைச் சுவடிகளிலிருந்து படி எடுத்து நூலாக்கி அளித்த பெருமை உ.வே.சா.வையே சாரும். அவர் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவரது பிறந்த நாள் டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அவர் குறித்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாணவர்கள் உரை இடம் பெற்றது. மாணவர்கள் உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர் தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிப்பதற்கு
எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்தும், அவரின் தமிழ்ப்பற்று குறித்தும் உரையாற்றினர். 
அவரைப் பற்றிய செய்திகளை பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினர். பள்ளி முதல்வர்கள் தமிழின் தொன்மைச் சிறப்பு பற்றியும் எடுத்துக்கூறினர்.
ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கலந்துகொண்டார்.
மோதிபாக் பள்ளியில் அதன் முதல்வர் ஹரி கிருஷ்ணன் உ.வே.சாவின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்தார். ஓலைச் சுவடிகளை உ.வே.சா. தேடியலைந்தபோது அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டினர். பின்னர் குழுமம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பள்ளி முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரையும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் ஆர். ராஜு பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com