காலிந்தி குஞ்ச் பகுதியில்  புதிய காவல் நிலையம் திறப்பு

தில்லி - உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் தென்கிழக்கில் காலிந்தி குஞ்ச் காவல்

தில்லி - உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் தென்கிழக்கில் காலிந்தி குஞ்ச் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தின் எல்லை வரம்பில் யமுனை சமவெளிப் பகுதி இடம்பெற்றுள்ளது. 
இந்த புதிய காவல் நிலையத்தை தென் மண்டல காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு சிறப்பு ஆணையர் ஆர்.பி. உபாத்யாய் திறந்துவைத்தார். அவர் கூறுகையில், "இந்தக் காவல் நிலையத்தில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், அதிக பணியில் இருக்கும் போலீஸாருக்கு உடற்பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும். போலீஸாருக்கு ஆரோக்கியமான உடல் அவசியம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது' என்றார். 
இதுகுறித்து தென்கிழக்கு மாவட்ட கூடுதல் துணை ஆணையர் ஹர்தீப் கூறியதாவது: காலிந்தி குஞ்ச் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கவனத்தில் கொண்டும், குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும் இந்தக் காவல் நிலையம் புதிதாக அண்மையில் அமைக்கப்பட்டது. இந்தக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும். மேலும், பழைய கட்டமைப்பில் இயங்கிவந்த ஜெய்த்பூர் காவல் நிலைய கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்தப் சீரமைக்கப்பட்ட கட்டடத்தில் காவல் ஆய்வாளர் அலுவலகம், ஏடிஓ, துணை அதிகாரி, சிசிடிஎன்எஸ், மகளிர் உதவி பிரிவு, ஆவணகம், தகவல் அதிகாரி அறைகள், விசாரணை அறை, உணவகம் ஆகியவை உள்ளன. மேலும், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com