என்டிஎம்சி பள்ளிகளின் புதிய பெயர் அடல் ஆதர்ஷ் வித்யாலயா

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நடத்தும் 31 பள்ளிகளின் பெயரை அடல் ஆதர்ஷ் வித்யாலயா என்று மாற்றம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நடத்தும் 31 பள்ளிகளின் பெயரை அடல் ஆதர்ஷ் வித்யாலயா என்று மாற்றம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து என்டிஎம்சி உயரதிகாரி கூறுகையில், என்டிஎம்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மேம்படுத்தவும்,  பள்ளிகள் குறித்து பொதுமக்கள் மனப்பான்மையை மாற்றவும், அனைத்து நகர் பாலிகா பள்ளிகளின் பெயரை அடல் ஆதர்ஷ் வித்யாலயா என 2019-20 கல்வியாண்டு முதல் மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி ஆவணங்களில் இந்த பெயர் மாற்றத்தை செய்யுமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். பெயர் மாற்றப்படவுள்ள பள்ளிகள் (இடம் -  பள்ளி பெயர்)  விவரம்:   
மந்திர் மார்க்-நகர் பாலிகா ஆண்கள் மேனிலைப் பள்ளி.  கோல் மார்க்கெட்- பெண்கள் மேனிலைப் பள்ளி,  நகர் பாலிகா பெங்காலி பெண்கள் மேனிலைப் பள்ளி. அன்சாரி நகர் -  நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  மோதி பாக் -  நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  திலக் நகர் -  நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  லோதி எஸ்டேட் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  பாபு தாம் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  ஹவ்லோல் ஸ்கொயர் -  நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி. லோதி ரோட் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  ஒளரங்கசீப் லேன் -  நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி. லக்ஷ்மிபாய் நகர் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.
கித்வாய் நகர் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.   பாபர் ரோட்  - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  சங்லி மெஸ்  -  நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  நேதாஜி நகர் - பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி. கிட்சனர் ரோட் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  சரோஜினி நகர்  பாபு மார்க்கெட் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  அலிகஞ்ச் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  வால்மீகி பஸ்தி - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  ஹனுமான் ரோட் - நகர் பாலிகா இருபாலர் மேனிலைப் பள்ளி.  பாபர் ரோட் -  நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.
காகா நகர் - நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  கித்வாய் நகர் -  நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  சரோஜ் நகர் பி அவென்யு - நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  சரோஜினி நகர் டி-பிளாக் - நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  நேதாஜி நகர் - நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  மோதி பாக் -  நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  அசோகா ஹோட்டல் பகுதி - நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  கே. காமராஜ் மார்க் - நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.  ஆர்.கே. ஆஷ்ரம் மார்க்.  நகர் பாலிகா தொடக்கப் பள்ளி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com