அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒன்றரை ஆண்டுகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.45 கோடிக்கு வர்த்தகம்

அம்மூர் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில்

அம்மூர் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் முதன் முறையாகத் தொடங்கப்பட்ட இ - நாம் எனும்  மின்னணு தேசிய வேளாண் சந்தையின் மூலம் சுமார் ரூ. 45 கோடிக்கு வேளாண் பொருள்கள் வியாபாரம் நடைபெற்றுள்ளது.
நாடெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மின்னணு வர்த்தகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை தேசிய அளவிலான சந்தையில்  இடைத்தரகர்கள் இன்றி,  கட்டுபடியான விலைக்கு விற்பனை செய்யவும்,  நாடெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் வாங்கும் வகையிலும்  சஹற்ண்ர்ய்ஹப் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ஙஹழ்ந்ங்ற் (ங்-சஅங) தேசிய வேளாண் சந்தை எனும் மின்னணு வர்த்தக முறையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். 
அதன்படி,  தமிழகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து அரசு ஒழுங்கு விற்பனைக்கூடங்களை தேசிய வேளாண் சந்தையில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 
 இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழகத்தில் 15 விற்பனைக் கூடங்களில் தேசிய வேளாண் சந்தையைத் தொடங்க கடந்த 2017-இல் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் அம்மூர் மற்றும் கலவை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேசிய வேளாண் சந்தை தொடங்க திட்டமிடப்பட்டது.
தமிழகத்திலே யே முதன்முறையாக வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூர் பேரூராட்சியில் கடந்த 36 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி இ - நாம் எனும் தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டது.
 நவம்பர் மாதம் முதல் தேசிய வேளாண் சந்தை செயல்பாட்டுக்கு வந்து வேளாண் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதல் தேசிய வேளாண் சந்தை இதுதான்.
 கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்  தொடங்கப்பட்ட இ - நாம் எனும் தேசிய வேளாண் சந்தையின் மூலம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வரை சுமார் 31 ஆயிரத்து  470 மெட்ரிக்  டன் நெல்,  20 மெட்ரிக் டன் ராகி,  1 மெட்ரிக் டன் மிளகாய் ஆகியவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு  சுமார் ரூ. 45 கோடி.
 மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த போது, இந்த மின்னணு வர்த்தக முறையின் மூலம் எத்தனை மெட்ரிக் டன்  வோளாண் விளைபொருள்கள் வர்த்தகம்  நடை பெற்றுள்ளது. அதே போல்  விவசாயிகள் மற்றும்  வியாபாரிகள்  மத்தியில்  எந்த அளவுக்கு  வரவேற்பு  உள்ளது என  வேலூர் மாவட்ட  ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்  கடந்த சில மாதங்களுக்கு முன் தில்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு வந்தார். 
முற்றிலும் கணினி வழி மூலம் விற்பனை நடப்பதால்,  இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு விளைபொருள்களை விற்று, நேரடியாக  வங்கி மூலம் பணம் பெற்றுக் கொள்வதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த  வரவேற்பைப்  பெற்றுள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர்  பழனி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com