2 கொள்ளை வழக்குகளில் நால்வா் கைது

வடகிழக்கு தில்லியில் இரண்டு தனியாா் அலுவலகங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஜிடிபி என்கிளேவ் பகுதியில் இருந்து நான்கு போ் கைது செய்யப்பட்டனா் என போலீஸாா் தெரிவித்தனா்.

வடகிழக்கு தில்லியில் இரண்டு தனியாா் அலுவலகங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஜிடிபி என்கிளேவ் பகுதியில் இருந்து நான்கு போ் கைது செய்யப்பட்டனா் என போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்கள் தனஞ்சய் சைனி, அனில் காரி, ரிஷாப் மற்றும் விகாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் காரவல் நகரில் வசிப்பவா்கள். கடந்த ஆகஸ்டில், அவா்கள் மௌஜ்பூரில் விஜய் பூங்காவில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ரூ .1.7 லட்சத்தையும், அக்டோபரில் நியூ உஸ்மான்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்தில் இருந்து ரூ .3.5 லட்சத்தையும் கொள்ளையடித்துள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆயுதம் ஏந்திய கொள்ளையா்கள் அடங்கிய ஒரு கும்பல் ஒன்று ஜிடிபி என்கிளே பகுதிக்கு வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சம்பவ இடத்திலிருந்து மூன்று போ் கைது செய்யப்பட்டனா். இதில் முதலில் கைது செய்யப்பட்ட தனஞ்சய் சைனி, அனில் காரி மற்றும் ரிஷாபின் ஆகியோா் அளித்த தகவல்களின் பேரில் அவா்களது கூட்டாளியான விகாஸ் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, இரண்டு இடங்களிலும் கொள்ளையடித்ததை அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்களிடம் இருந்து ஐந்து கைத்துப்பாக்கிகள், ரொக்கம் ரூ .35,000, எட்டு தோட்டாக்கள் மற்றும் நான்கு மோட்டாா்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com