இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் பாதிக்கும் இடங்கள்

தில்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 3) மாலையிலும், சில இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போர்டு தெரிவித்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 3) மாலையிலும், சில இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போர்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லி ஜல் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புராரி சாலை, பெங்காலி காலனியில் நீர்ப்பாசனக் கால்வாயின் குறுக்கே கால்வாய் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மேலும், 600 எம்எம் டயாமீட்டர் எம்எஸ் பிரதான நீர் வழித்தடத்தை மாற்றும் பணி நடைபெறுகிறது. இவற்றின் காரணமாக குறைந்த அழுத்தப் பகுதியில் புதன்கிழமை மாலை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
அந்த இடங்கள் விவரம் வருமாறு: ஜகத்பூர் கிராமம், முகந்த்பூர் பகுதி 1, 2, சந்த் நகர் கமல் விஹார், ஜரோடா பகுதி 1,2,3, பகவான் பார்க், மிலன் விஹார், புராரி கிராமம், புராரி கர்ஹி, கௌசிக் என்கிளேவ், அம்ரித் விஹார், அஜீத் விஹார், லட்சுமி விஹார், நாத்துபுரா, இப்ராஹிம்பூர், டிசிஎம் காலனி பகுதி 1, 2, சுஷாந்த் விஹார் கிராமம் குஷக் எண்: 1,2, பி-பிளாக் சுஷாக் எண்:1, காதிப்பூர் கிராமம், காதிப்பூர் யு/ஏ காலனி, யு/ஏ காலனி, குஷக் எண்: 2, காதி விஹார், ஸ்வரூப் விஹார், பிரேம் நகர் காலனி, ஃபூல் பாக், பிரதீப் விஹார், சாஸ்திரி பார்க், கௌசிக் என்கிளேவ் பி -பிளாக், சங்கேர்புரா, புராரி கிராமம், ஹரிஜன் பஸ்தி, ஏக்தா என்கிளேவ், சத்யா விஹார், தோமர் காலனி, டீச்சர் காலனி, வஷிஷ்டா விஹார், பாபா காலனி ஏ மற்றும் பி பிளாக், பரசுராம் என்கிளேவ், விஜய் காலனி புராரி மற்றும் டி-பிளாக் நாத்துபுரா ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
அதேபோன்று, ஓபராய் மேம்பாலம் பகுதியில் இருந்து அமைச்சரவை செயலகம், சிஜிஓ வளாகம், லாலா லஜபதி ராய் மார்க் பகுதிக்கு 900 மிமீ அளவு குடிநீர் வழித்தடத்தை மாற்றுவதற்கான இணைப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி வரை தர்யா கஞ்ச், எல்என்ஜேபி மருத்துவமனை, தேசிய உயிரியல் பூங்கா, பிரகதி மைதான், காகா நகர், சிஜிஓ வளாகம், லோதி ரோடு, நிஜாமுதீன், என்டிஎஸ்இ-1 மற்றும் 2, கிரேட்டர் கைலாஷ் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் 
குடிநீர் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com