தில்லியல் மட்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி சாத்தியம்: பி.சி. சாக்கோ

மக்களவைத் தேர்தலில் பிற மாநிலங்களில் தொகுதிகள் ஒதுக்கக் கோராமல் தில்லியில் மட்டும் கூட்டணி அமைத்துப்

மக்களவைத் தேர்தலில் பிற மாநிலங்களில் தொகுதிகள் ஒதுக்கக் கோராமல் தில்லியில் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஆம் ஆத்மி முன்வந்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமாகும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக அக்கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 
ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி,  ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், இந்தக் கூட்டணிக்கு தில்லி காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும்,  காங்கிரஸ் தலைவரின் உத்தரவுப்படி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தோம். 
முதலில் தில்லியில் மட்டும் கூட்டணி எனப் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் திடீரென பஞ்சாப்,  ஹரியாணா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மிக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. 
மதவாத பாஜகவை வீழ்த்த தில்லியில் மட்டும் தான் கூட்டணி தேவைப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளதால் அம்மாநிலங்களில் கூட்டணிக்கு அவசியமில்லை. இந்நிலையில், பிற மாநிலங்களில் தொகுதி ஒதுக்கக் கோராமல் தில்லியில் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட  ஆம் ஆத்மிக் கட்சி  முன்வந்தால் கூட்டணி சாத்தியமாகும். 
மேலும், ஒருசில தினங்களில் தில்லியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com