டிடிஇஏ பள்ளிகளில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் சுதந்திர தின விழா சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் சுதந்திர தின விழா சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
லோதி எஸ்டேட், மந்திர் மார்க், ராமகிருஷ்ணாபுரம், புசா சாலை, ஜனக்புரி, மோதி பாக், லக்ஷ்மிபாய் நகர் ஆகிய இடங்களில் உள்ள டிடிஇஏ பள்ளிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. குழுப்பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் தொடக்க நிலைப்பிரிவு மாணவர்கள் பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து வந்து பேசினர். 
ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திரசேகரன் கொடியேற்றினார். வினாடி - வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், "பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் மீது அக்கறை காட்டுவதும், அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கொடியேற்றியதும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது' என்றார்.
பூசா சாலைப் பள்ளி நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் வைத்தியநாதன் கொடியேற்றினார். நிகழ்வில் டிடிஇஏ இணைச்செயலர் ரவி நாயக், பொருளாளர் சண்முக வடிவு, பள்ளியின் இணைச்செயலர் ராஜேந்திரன், உறுப்பினர் பரமசிவம், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
லக்ஷ்மிபாய் நகர்ப் பள்ளி நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் கணேஷ் ஐயர் கொடியேற்றினார். முதல்வர் மீனா சகானி அனைவரையும் வரவேற்றார். மந்திர் மார்க் பள்ளியில் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற ஏர்மார்ஷலுமான பத்மா பண்டோபாத்யாய் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் இணைச்செயலர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலர் மணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜனக்புரி பள்ளியில் மத்திய அரசின் துணை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அறிவழகன் கொடியேற்றினார். பள்ளியின் முன்னாள் மாணவர் பிரியா அணில் தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அறிவழகன் பேசுகையில், "மாணவர்கள் திருக்குறளை எப்போதும் படிக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை இலவசமாக அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்' என்றார்.
லோதி எஸ்டேட் பள்ளியில் முன்னாள் மாணவர் வழக்குரைஞர் உமாபதி கொடியேற்றினார். மோதிபாக் பள்ளியில் முன்னாள் மாணவரும் ஆந்திரா சங்கத்தின் தலைவருமான மணி நாயுடு கொடியேற்றினார். 
அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளிகளின் முதல்வர்கள், அனைவரையும் வரவேற்றுப் பேசினர். அனைத்துப் பள்ளிகளிலும் நிகழ்ச்சியில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com