கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.15 லட்சம் கொள்ளை: மூவர் கைது

மேற்கு தில்லி, பஞ்சாபி பாக் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரைத்

மேற்கு தில்லி, பஞ்சாபி பாக் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரைத் தாக்கி ரூ. 15 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: மேற்கு தில்லி, பஞ்சாபி பாகில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவர் அமித் பாகா. அதன் மேலாளர் யுகம். இந்நிலையில், காவல் நிலையத்தில் அமித் பாகா வியாழக்கிழமை ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தானும், தனது கடையின் மேலாளரும் புதன்கிழமை நள்ளிரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வாகனத்தில் புறப்பட்ட போது, அந்த வழியாக வந்த கார், தங்களது வாகனத்தில் இடித்ததாகவும், இதைத் தொடர்ந்து அதில் வந்தவர்கள் தங்களைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கார் இடித்ததில் வாகனத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதற்காக காரை ஓட்டி வந்தவர் தன்னிடம் ரூ.2,500 அளித்ததாகவும், பின்னர் காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து தன்னையும், மேலாளரையும் சரமாரியாகத் தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அப்போது, தான் வைத்திருந்த பணப் பையை அவர்கள் பறித்துக் கொண்டு தப்பியதாகவும், அந்தப் பையில் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருந்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக திலக் நகரைச் சேர்ந்தவர்களான பிரப்ஜோத் சிங் (27), காகன் ஷேகல் (29) மற்றும் விகாஸ்புரியைச் சேர்ந்த பிரீத் சிங் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரப்ஜோத் சிங் மனை வணிகம் செய்து வருகிறார். பிரீத் சிங் கார் விற்பனை செய்து வருகிறார். காகன் ஷேகல் ஓப்பந்ததாரராக உள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com