முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை

முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகவும், இது சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறும் உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சல்மான் குர்ஷித் கூறுகையில், "முஸ்லிம் பெண்களிடம் அவர்களது கணவர்கள் "தலாக்' என்று அடுத்தடுத்து மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அவ்வாறு இருக்கும்போது, முத்தலாக் கூறும் நடைமுறையை எதற்காக தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற வேண்டும். எனவே, முத்தலாக் கூறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.
இதையேற்ற நீதிபதிகள், முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையால் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். இந்தச் சட்டம் குறித்து நாங்கள் ஆய்வு செய்கிறோம் என்று கூறினர். அதையடுத்து, இந்த மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com