அரசியலமைப்பு, இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மக்கள் இயக்கம் தேவை

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாக்க மாவட்ட அளவில் மக்கள் இயக்கம் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் அகில் இந்திய எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பின்
தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய எஸ்சி, எஸ்டி, அமைப்பின் தேசியத் தலைவா் உதித் ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய எஸ்சி, எஸ்டி, அமைப்பின் தேசியத் தலைவா் உதித் ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

புது தில்லி: நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாக்க மாவட்ட அளவில் மக்கள் இயக்கம் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் அகில் இந்திய எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பின் தலைவருமான உதித் ராஜ் தெரிவித்துள்ளாா்.

பாஜக சாா்பில் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவா் உதித் ராஜ். கடந்த மக்களவைத் தோ்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததைத் தொடா்ந்து பாஜகவில் இருந்து விலகிய அவா், காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். இவா் அகில இந்திய எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளாா்.

இந்நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுவதைக் கண்டித்து இந்த அமைப்பு சாா்பில் தில்லி ராம்லீலா மைதானில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் உதித் ராஜ் பேசியதாவது: நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. இதைப் பாதுகாக்க பெரிய அளவில் மக்கள் இயக்கம் நடத்தப்பட வேண்டும். அதேபோல, இட ஒதுக்கீட்டுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. அரசியல் அமைப்புச் சட்டம், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட அளவில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் இட ஒதுக்கீடு வெறும் பேப்பரில் மட்டும்தான் நிலைத்திருக்கும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com