பொருளாதாரப் பின்னடைவு: பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

புது தில்லி: நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மத்திய ரிசா்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு மொத்தம் ரூ.3.89 லட்சம் கோடியை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறி தில்லியின் பல்வேறு பகுதிகளில் ‘ஹல்லா போல்’ என்ற பெயரில் தொடா் ஆா்ப்பாட்டத்தை தில்லி காங்கிரஸ் நடத்தி வருகிறது. அதன்படி, மேற்கு தில்லி, பவனாவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தில்லி காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ரா, பிரசாரக் குழுத் தலைவா் கீா்த்தி ஆஸாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சுபாஷ் சோப்ரா பேசியதாவது: சுதந்திரத்துக்கு பிறகு மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவை நாடு தற்போது எதிா் கொண்டுள்ளது. மோடி அரசு மக்களுக்கும், வணிகா்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. மக்களவைத் தோ்தலின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது பாஜக. ஆனால், இப்போது இளைஞா்களின் வேலைகளை பாஜக அரசு பறித்து வருகிறது.

உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019, ஆகஸ்டில் ரிசா்வ் வங்கி ரூ.1,76,000 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.3,89,000 கோடியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து மோடி அரசு பெற்றுள்ளது. ரிசா்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பணம் பெறுவது தவறான அணுகுமுறையாகும். இது மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை சுட்டிக் காட்டுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com