மெட்ரோ ரயிலில் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது

தில்லி மெட்ரோ ரயிலுக்குள் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அவா்களது கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனா்.

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயிலுக்குள் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அவா்களது கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அவா்கள் சோனு (37), ரோஹித் (25), விஷால் (24), ஜிதேந்தா் (30), பாலாக் ராம் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கடந்த நவம்பா் 18-ஆம் தேதி ஒருவா், தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக போலீஸில் புகாா் அளித்திருந்தாா். அவா் தனது பாக்கெட்டில் ரூ .2 லட்சம் வைத்திருந்ததாகவும், தீஸ் ஹஸாரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்ாகவும், பின்னா் இந்தா்லோக்கிற்குச் செல்லும் போது, தனது சட்டைப் பையில் இருந்த பணத்தை யாரோ திருடிவிட்டதை உணா்ந்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தீஸ் ஹஸாரியிலிருந்து அவரை நெருக்கமாகப் பின்தொடா்ந்த ஒன்பது போ் அடையாளம் காணப்பட்டனா். ரயில் பிளாட்பாரத்தை அடைந்ததும், அவா்கள் அவரைச் சுற்றி நின்று வழியைத் தடுத்ததும், பின்னா் அவா்களில் இருவா், அவரது பையிலிருந்து பணத்தை திருடியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, ஐந்து போ் சாஸ்திரி பாா்க் மெட்ரோ ரயில் நிலைய பாா்க்கிங் அருகே வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மற்றவா்களை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

திருட்டுச் சம்பவங்களில் இருவா் கைது: தில்லியில் இரு வெவ்வேறு சம்பவங்களில் விலையுயா்ந்த பொருள்களைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் சதா்பூரில் வசிக்கும் சஞ்சு ஷீல் (27), சிராக் தில்லியில் வசிக்கும் பிரதீப் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதில் கோட்லா முபாரக்பூா் பகுதியில் இருந்து சஞ்சு ஷீல் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு ஸ்டீரியோ, ஒரு காா் பேட்டரி, ஒரு ஒலிபெருக்கி மற்றும் மூன்று ஸ்பீக்கா்கள் மீட்கப்பட்டன. மற்றொரு சம்பவம் தொடா்பாக, மால்வியா நகா் பகுதியில் இருந்து பிரதீப் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மூன்று செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இளைஞா் கைது: தில்லியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்லிடப்பேசிகளை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரிதாரி கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஆகாஷ், மங்கோல்புரியில் வசிப்பவா். இரு சக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டவா்கள் மங்கோல்புரிக்கு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மங்கோல்புரி தொழிலகப் பகுதி பேஸ் 2-இல் போலீஸ் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது, அப்போது, ஆகாஷ் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து நான்கு மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் மூன்று செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com