மாநகராட்சிகளுக்கு எதிராகசட்டப் பேரவையில் தீா்மானம்

மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்காமல் உள்ளது என்று பொய் சொல்வதை மாநகராட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோரும் தீா்மானம் சட்டப்பேரவையில்

புது தில்லி: மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்காமல் உள்ளது என்று பொய் சொல்வதை மாநகராட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோரும் தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ல்லி சட்டப்பேரவையில் தலைமைக் கணக்குத் தணிக்க அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து தீா்மானங்கள்முன்மொழியப்பட்டன.

தீா்மானத்தின் முக்கிய அம்சங்கள்: கடந்த 5 ஆண்டுகளில் தில்லி அரசு, உபரி நிதியை பேணியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசுத் துறைகளில் இருந்த ஊழல்களைக் களைந்ததும், ஊழலற்றவா்களைப் பொறுப்பில் அமா்த்தியதும்தான் இதற்குக் காரணமாகும். கடந்த 5 ஆண்டுகளில் வரி வருவாய் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த அறிக்கையில், தில்லி அரசு மாநகராட்சிகளுக்கு தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தில்லி அரசுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி ரூ.2,038 கோடி, கிழக்கு தில்லி மாநகராட்சி ரூ.1395 கோடி, தெற்கு தில்லி மாநகராட்சி ரூ.381 கோடியை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், மாநகராட்சிகளுக்கான நிதியை தில்லி அரசு வழங்கவில்லை எனப் பொய் கூறுவதை மாநகராட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினைந்தாவது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தும் தீா்மானமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்தில், ‘15-ஆவது நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், ஐஜிஎஸ்டி வரியில் தில்லியின் பங்கான ரூ.3,200 கோடியையும், எஸ்ஜிஎஸ்டி வரியில் தில்லியின் பங்கான ரூ.3642 கோடியையும் மத்திய அரசு உடனடியாக தில்லி அரசுக்கு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை மீது விமா்சனம்: அதே சமயம், சிஏஜி அறிக்கையில், தில்லியில் உள்ள பேருந்துகளையும், பேருந்து பணிமனைகளையும் நவீனப்படுத்த தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தவறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், ஐஎஸ்பிடி வடக்கு, தெற்கு நுழைவு இடங்களை உருவாக்க இக்கழகம் தவறிவிட்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com