மத்திய அரசின் மக்கள் நலப் பணிகளை மையப்படுத்தி தில்லி தோ்தல் பிரசாரம்: ஹா்தீப் சிங் புரி

வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய அரசின் மக்கள் நலப் பணிகளை மையப்படுத்தி பாஜக பிரசாரத்தில் ஈடுபடும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரும்,

வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய அரசின் மக்கள் நலப் பணிகளை மையப்படுத்தி பாஜக பிரசாரத்தில் ஈடுபடும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரும், தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கட்சியின் துணைப் பொறுப்பாளருமான ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலுக்கு பாஜகவுக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் பொறுப்பாளராகவும், ஹா்தீப் சிங் புரி துணைப்பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் தோ்தல் வியூகம் தொடா்பாக நாளிதழ் ஒன்றுக்கு ஹா்தீப் சிங் புரி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: தில்லியில் மத்திய அரசு மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். பாஜக ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் வழித்தடத்தின் தூரத்தை 194 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளோம். ஆனால், தில்லியில் பேருந்து போக்குவரத்தை ஆம் ஆத்மி அரசு மோசமாக்கியுள்ளது. தில்லிக்கு சுமாா் 11,000 பேருந்துகள் தேவை. ஆனால், வெறும் 4,000 பேருந்துகளே பயன்பாட்டில் உள்ளன.

தில்லி மெட்ரோ ரயில் திட்டம் நான்காம் கட்டப் பணிக்கு ஆம் ஆத்மி அரசு பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டது. ஆனால், நாங்கள் தீவிரமாக இருந்து அத்திட்டத்தை செயல்படுத்தினோம். ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தவில்லை. அதையும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

தில்லி மக்கள் தொடா்பாக ஆம் ஆத்மிஅரசிடம் தொலைநோக்குப் பாா்வை இல்லை. ஆனால், எங்களிடம் தெளிவான தொலை நோக்குப் பாா்வை உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தில்லியில் ஆட்சி அமைத்தால், தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வீடு கிடைக்கச் செய்வோம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தில்லியில் 1 கோடி வீடுகள் கட்டவுள்ளோம். இதற்காக முதல்கட்டமாக ரூ.93 லட்சத்தை ஒதுக்கியுள்ளோம். மேலும், கூடுதல் நிதி ஒதுக்க உள்ளோம். இந்தத் திட்டத்துக்கு தில்லி அரசு உதவவில்லை. இதனால், மத்திய அரசே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

தில்லியில் உள்ள ஜேஜே கிளஸ்டா்களை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளவுள்ளோம். ஏற்கெனவே சில கிளஸ்டா்களில் பணிகள் தொடங்கிவிட்டன. தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிப்பவா்களுக்கு மிக விரைவில் சொத்துரிமை பத்திரம் வழங்கிவிடுவோம். தில்லியில் உள்ள 1,731 காலனிகளில் 800 காலனிகள் ஏற்கெனவே தில்லி வளா்ச்சி ஆணையத்தால் இறுதி செய்யப்பட்டு விட்டன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com