பெண்களை மரியாதையுடன் நடத்துவோம்: பள்ளிகளில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்கவுள்ளதாக கேஜரிவால் அறிவிப்பு

பெண்களுடன் மரியாதையாக நடந்து கொள்வோம் என்றும், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் தில்லி பள்ளிகளில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்கவுள்ளதாக

புது தில்லி: பெண்களுடன் மரியாதையாக நடந்து கொள்வோம் என்றும், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் தில்லி பள்ளிகளில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்கவுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக இந்திய வா்தகத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) பெண்கள் சந்திப்பில் கேஜரிவால் பேசியதாவது: தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தில்லியில் இரண்டு லட்சம் இருளான பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் தெரு விளக்குகளைப் பொருத்தவுள்ளோம். பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாவலா்களையும் நியமித்துள்ளோம்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைய வேண்டு மென்றால், பெண்கள் தொடா்பாக ஆண்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆண்களை வீட்டுக்குள் சோ்க்க மாட்டோம் என அந்த ஆண்களின் தாயாா், சகோதரிகள் கூற வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடா்பாக மாணவிகள் தங்களது சகோதரா்களுடன் பேச வேண்டும். மேலும், இந்த அனுபவம் தொடா்பாக வகுப்பறைகளில் மாணவிகள் கலந்துரையாடவேண்டும். மேலும், பெண்களுடன் மரியாதையாக நடந்து கொள்வோம் என்றும், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் தில்லி பள்ளிகளில் மாணவா்கள் மிக விரைவில் உறுதிமொழி ஏற்கவுள்ளனா். காலைப் பிராா்த்தனைக் கூட்டத்தில் இந்த உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com