கிரேட்டர் நொய்டாவில் 25,000 லிட்டர் மதுபானம் பறிமுதல்

தேசியத் தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டா பகுதியில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த

தேசியத் தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டா பகுதியில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 25,000 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை கெளதம் புத் நகர் போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள சப்ரெளலா கிராமத்தில் குடோன் ஒன்றில் மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த குடோனில் இரண்டு டிரக்குகளில் சட்டவிரோதமாக மதுபானம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மற்றொரு டிரக்கும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மூன்று டிரக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 60 சதவீதம் செறிவு கொண்ட 25,000 லிட்டர் எத்தனால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த குடோன் பதல்பூர் காவல் சரகத்தின் கீழ் வருகிறது. இதையடுத்து, 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என்றார் அந்த அதிகாரி. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விநீத் ஜெய்ஸ்வால் கூறுகையில், "அல்மார்க், கன்னெளஜ், ஜான்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இந்த மதுபானங்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com