ஷீலா தீட்சித்துக்கு விஜய் கோயல் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித்துக்கு மத்திய அமைச்சரும்,

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித்துக்கு மத்திய அமைச்சரும், பாஜக முன்னாள் தில்லி தலைவருமான விஜய் கோயல் வாழத்துத் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி அவமானப்படுத்தியதை ஷீலா தீட்சித் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் விஜய் கோயல் கூறியதாவது:
தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் தற்போது பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அப்போதும், இப்போதும் தொடர்ந்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. 
இது குறித்து தில்லிவாசிகளுக்கு இரண்டு கட்சிகளும் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது முதல், முன்னாள் தில்லி முதல்வரான ஷீலா தீட்சித் மீது ஊழல் புகார்களைத் தெரிவித்து வந்தது. இப்போதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இவ்வாறு பல்வேறு தடவை ஷீலா தீட்சித்தை ஆம் ஆத்மி கட்சி அவமானப்படுத்தியுள்ளது. இதை ஷீலா தீட்சித் மறந்துவிடக் கூடாது.
மேலும், தற்போதைய ஆம் ஆத்மி அரசு மீது காங்கிரஸ் கட்சியும் ஊழல் புகார்களை கூறி வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடந்த 4 ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறது. எனவே, பரஸ்பரம் புகார் கூறி வரும் இரண்டு கட்சிகளும் தில்லிவாசிகளுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் விஜய் கோயல்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாக தில்லி அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக இருந்த அஜய் மாக்கன், உடல் நலக் குறைவு காரணமாக அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தில்லியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த ஷீலா தீட்சித்தை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. 
மேலும், அவருக்கு உதவுவதற்காக 3 செயல் தலைவர்களையும் கட்சி நியமித்துள்ளது.
இந்த நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, தில்லி காங்கிரûஸ பொருத்தவரையில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷீலா தீட்சித்துக்கு பாஜக தலைவர் விஜய் கோயல், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com