தலைநகரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை: ஏராளமானோர் பங்கேற்பு

தலைநகர் தில்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்து கொண்டனர். 

தலைநகர் தில்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்து கொண்டனர். 
பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நாடெங்கும் சனிக்கிழமை தொடங்கியது. தில்லி பாஜக சார்பில் ஜவாஹர்லால் நேரு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌகான் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். 
மேலும், பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி எம்.பி., பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான தில்லி பொறுப்பாளர் குல்ஜீத் சிங் சாகல், பாஜகவின் தேசியச் செயலர் ராம்லால், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்வில், ஹரியாணாவி மொழியின் பிரபல பாடகி சப்னா சௌத்ரி கலந்து கொண்டு முதலாவது உறுப்பினராக பாஜகவில் இணைந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில் "தில்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாஜக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் பாஜகவுக்கு அழைத்து வர வேண்டும். தில்லியில் உள்ள அனைத்து பூத்களிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும். பிரதமர் மோடி என்பவர் தனி மனிதரல்ல. அவர்ஓர் இயக்கம். பாஜக தலைவர் அமித் ஷாவின் அகராதியில் முடியாது என்ற சொல்லுக்கே இடமில்லை' என்றார். 
குல்ஜீத் சிங் சாகல் பேசுகையில் "தில்லியில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். 10 லட்சம் புதிய உறுப்பினர்களை தில்லி பாஜகவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்' என்றார். 
ராம்லால் பேசுகையில் "தில்லியில் 13,800 பூத்கள் உள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு பூத்திலும் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதை இலக்காக வைத்து தொண்டர்கள் செயல்பட வேண்டும்' என்றார். 
மனோஜ் திவாரி பேசுகையில் "இந்த உறுப்பினர் சேர்க்கை தில்லியில் பெரும் வெற்றி அடையும் என பாஜக தலைவர்களுக்கு உறுதியளிக்கிறேன். 
அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கி தில்லியில் பாஜகவை அசுர வளர்ச்சியடைச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார். தில்லியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com