இந்திய வனச் சட்டத் திருத்தம்: ஜாவடேகருக்கு பிருந்தா காரத் கடிதம்

இந்திய வனச் சட்டத் திருத்தம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்திய வனச் சட்டத் திருத்தம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார். வனச் சட்டத் திருத்தத்தால், பழங்குடிகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது என்று கடிதத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
1927-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய வனச் சட்டத்தின் வாயிலாக இங்கிலாந்து காலனியத்துவவாதிகள் நாட்டில் உள்ள வனங்கள் மீது அரசின் உரிமையை நிலை நாட்டினர். மேலும் பழங்குடிகள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். இந்நிலையில், இந்திய வனச் சட்டத் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு உத்தேசித்துள்ள ஷரத்துகள் கொடுமையான அடக்குமுறை செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, பழங்குடிகளின் உரிமைகளைப் பறித்துள்ளன.
மேலும், பழங்குடிகளின் ஒவ்வொரு வாழ்வு முறையை குற்றமாகக கருத வழிகோலுகின்றன. எந்தவித வாரண்டும் இல்லாமல் பழங்குடிகளைக் கைது செய்யும் அதிகாரமும், சட்டத்தை செயல்படுத்த ஆயுதங்களைப் பயன்படுத்தவும் வன அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வனத் துறை வாரியத்தில் ராணுவத் தலைமைத் தளபதி உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இது குறித்தும், பழங்குடிகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com